யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில், யாழ்ப்பாண நகர பகுதி, நல்லூர், கரவெட்டி ஆகிய பகுதிகளில், டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேருக்கு டெங்கு
வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக் களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக ஆயிரத்து 843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலையே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த் தெரிவித்தார்.