உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்த போதிலும் இன்று சனிக்கிழமை (08) வரை நட்டஈடு வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நட்டஈடு வழங்கப்படவில்லை
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12 ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொண்டது.
அத்துடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது. இதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஆறுமாத காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















