பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக் கைதியொருவர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடிய சந்தேகநபர் 36 வயதுடையவரெனவும் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் பயிர்ச்செய்கை பிரிவைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது.
தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி பிரிவினர்
சந்தேகநபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
இந்நிலையில் மாயமானவரைத் தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.