பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் சற்று முன்னர் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிய வந்துள்ளது.




















