பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் திடீரென பற்றிய தீ யினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேசமயம் சேத விபரங்கள் வெளியாகவில்லை.