நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு போதிய நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது.
கடந்த பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, இந்த ஆண்டு சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் ரூபாவை விவசாயிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த தொகையை நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை செயற்பட்டது. அத்துடன் இதுவரை 300 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.
இதில் மேலும் 200 மில்லியன் ரூபா எஞ்சியுள்ள நிலையில், விவசாயிகள், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை விற்பனை செய்யாதுள்ளது.