அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீர்மின் உற்பத்தி
“தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி திறன் தேசிய தேவையில் 15 வீதமாக குறைந்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தேவையில் 65 சதவீதத்திற்கு அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது, இதன் விளைவாக உற்பத்தி செலவு 800 மில்லியனில் இருந்து 1,200 மில்லியனாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில், போதுமான அளவு மழை பெய்துள்ளது. நீர்த்தேக்கங்கள் நிரம்பின. சில சமயங்களில், 70 சதவீத தேவைக்கு நீர்மின்சாரத்தை நம்பியிருந்தோம். இன்று15 சதவீதமாக குறைந்துள்ளது.
மின்சார சபையானது தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.