3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 09 லட்சத்தை தாண்டியுள்ளதாக அபிவிருத்தி மற்றும் முதலீட்டு உறவுகள் பணிப்பாளர் பிரசாத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் சுற்றுலா பயணிகளும் இவர்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் பல்லேகல மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மைதானத்தைச் சுற்றியுள்ள தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா சேவைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரசாத் ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகள்
இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்மூலம் பெருந்தொகை டொலர் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.