யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பூரணை தினமான நேற்று (30.08.2023) மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 25 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.