கண்டியில் கடந்த பத்து நாட்களில் நகர எல்லைக்குள் 250 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக கண்டி மாநகர சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் நாமல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எசல பெரஹெரா நிகழ்வை காண வரும் மக்கள் கொண்டு வரும் பொலித்தீன் உணவுப் பொருட்கள் உட்பட ஒரு நாளைக்கு 25 தொன் குப்பைகள் வீசப்படுவதாக அவர் கூறினார்.
தினமும் ஐந்துதொன் கழிவுகள்
ஏறக்குறைய நூறு யானைகள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் தினமும் 15 தொன்னுக்கும் அதிகமான மரக்கட்டைகள், யானைகளின் சாணம் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பொம்மைகள், மதிய உணவுப் பெட்டிகள் என கிட்டத்தட்ட ஐந்துதொன் கழிவுகள் தினமும் சேகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் தற்போது 250 தொன்களுக்கும் அதிகமான கழிவுகள் மீள்சுழற்சி செய்வதற்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதாகவும், குப்பைகளை வகைப்படுத்துவது இலகுவானதல்ல எனவும் நாமல் திஸாநாயக்க கூறியுள்ளார்.