குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் தம்புலல் வீதியில் ஓமாரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீழ்ந்த மரத்தை அகற்றும் வரை வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.