ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவர் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு பயணிக்கின்றார்.
இதேவேளை அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.