வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகொடுத்தார் அலங்கார கந்தனாம் நல்லூர் கந்தன்.
பக்தர்கள் நேர்ந்த்திக்கடன்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ பெரும் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இன்றையதினம் தேர்த்திருவிழாவும், நாளை தீர்த்த உற்சபமும் இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலய பெரும் திருவிழாவைகாண புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையான பக்தர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களை நிறைவேற்ரி வருகின்றனர்.
அடி அடித்தல், அங்கப்பிரதட்சினம் செய்த, காவடிகள் என நல்லூர் பதிவால் கந்தனில் ஆலய சுற்றாடலில் மட்டுமல்லாது, நல்லூர் பெரும் திருவிழாவையொட்டி யாழ் நகரும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா கோக்ஷங்களுடன் பவனி வந்த நல்லூர் கந்தனை காண கண் கோடி வேண்டும்.