நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது சந்தையில் எலுமிச்சைப்பழத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,எலுமிச்சை விலை உயர்வினால் சந்தைகளில் எலுமிச்சை விற்பனையை தவிர்த்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.