விநாயகப் பெருமானை முன்னிறுத்தி செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும் என்பதே ஐதீகம்.
நன்மை, தீமை என்று எதுவாக இருந்தாலும் விநாயகரை வணங்காமல் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் இதன் மூல கருத்து. முதலில் கடைக்கு சென்று சுத்தமான வெள்ளெருக்கு விநாயகரை வாங்கி வர வேண்டும்.
பிறகு அந்த விநாயகருக்கு நாம் ஐங்காயம் என்று கூறப்படும் ஐந்து வகையான சந்தனாதி தைலங்களை பூச வேண்டும். பிறகு புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி மஞ்சள் இவை மூன்றையும் தனித்தனியாக அவருக்கு நாம் பூச வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வெள்ளெருக்கில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி வெள்ளெருக்கு விநாயகர் புனிதத் தன்மையுடன் திகழ்வார்.
இப்பொழுது அவரை நாம் எவர்சில்வர் தட்டை தவிர்த்து ஏதாவது ஒரு தட்டில் மஞ்சள் கலந்த அரிசியின் மேல் வைக்க வேண்டும்.
அவருக்கு சந்தனம், குங்குமம் வைத்து அருகம்புல்லை சாற்றி முடிந்தால் எருக்கம் பூவையும் வைத்து அவருக்கு பிடித்த ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை படைக்க வேண்டும்.
பிறகு கணபதியின் மூல மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக வெள்ளெருக்கு விநாயகருக்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தையும் 108 முறை உச்சரிக்க வேண்டும்.
அந்த மந்திரம் “ஓம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம்தனவே ரவிப்ரியே வசிய ஸ்வாஹா”. இவ்வாறு 48 நாட்களும் இரண்டு மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வெள்ளருக்கு விநாயகருக்கு நாம் உருவேற்றுகிறோம்.
இவ்வாறு உருவேற்றிய பிறகு நம்முடைய நியாயமான கோரிக்கையாக ஏதாவது ஒரு வேண்டுதலை நாம் வைத்து 11 நாட்கள் மட்டும் இந்த மந்திரங்களை 108 முறை கூறினால் விநாயகர் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து சக்திகளையும், வாய்ப்புகளையும் நமக்கு அருள் புரிவார்.