இதுவரை பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாரியளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தாமதமானதால் அக்குழுவிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
இதன்காரணமாக அந்த வேட்பாளர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது கடமைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சாதகமான தீர்வொன்றை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று கலந்துரையாடியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .