யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் – மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் (13) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.