திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்தி மீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளது.
இன்றைய தினம் (17-09-2023) தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தி அதனை சிதைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்ததாவது,
சாதரண எங்கள் நினைவேந்தலைக் கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.