அனைத்து தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடருந்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பின் காரணமாக இன்று (04.10.2023) மாலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து தொடருந்துகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடருந்து சேவைகள் இரத்து
இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு பின்னர் சேவையில் ஈடுபடவிருந்த சுமார் 20 ற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



















