மன்னாரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் – பெரியகடை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற விபத்து
அம் முதியவர் உணவு வாங்குவதற்காக தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மத்திய கோட்டினை தாண்டி முதியவரது அருகே வந்து அவரது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று 4 மணி அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.