பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் எதிர்ப்பு ஊர்வலம் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.