மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தாய் வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் தனது மூன்று பிள்ளைகளை கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான தந்தை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பிள்ளைகளும் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அத்தோடு மூன்று பிள்ளைகளும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸ் பொறுப்பில் வைக்க பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இந்த மூன்று பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அந்த பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் தமது சொந்த செலவில் பூர்த்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.