பொலன்நறுவை மெதிரிகிரிய பிரதேசத்தை வசித்து வந்த கடற்படை வீரர் ஒருவர் மீன் ஒன்றின் விஷ முள் குத்தியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகஸ்வெவ, போபீயாவெவ கிராமத்தை சேர்ந்த இந்த கடற்படை வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன் நண்பர் ஒருவருடன் எழபட்டுவெவ என்ற குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது குளத்தில் இருந்த விஷ முள்ளுடன் கூடிய விரால் மீனை கடற்படை வீரர் மிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்
மீனின் முள் குத்தியதால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அவர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்படை வீரருக்கு 38 வயது எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கடற்படை வீரரின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைகளுக்காக பொலன்நறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.