சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது.
36 லட்சம் வங்கிக்கணக்கு விவரங்கள்
அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இந்த பட்டியல் அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் 5வது பட்டியலை ஸ்விஸ் அரசு இந்தியாவிடம் அளித்துள்ளது.
எனினும் இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை. அதேவேளை இதுவரை மொத்தம் 104 நாடுகளின் 36 லட்சம் வங்கிக்கணக்கு விவரங்களை சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.