கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, கலாச்சார ரீதியாக, மற்றும் சுகாதார ரீதியாக போதை மருந்து பயன்பாடு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக பழங்குடியின சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.