டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்குரிய அடிப்படை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் துறையின் தனிப்பட்ட முதலீடுகள் மூலம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினருக்கு கிட்டாத வாய்ப்புக்களில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.