திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாக அதன் பொறுப்பாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றை பார்வையிட தினம்தோறும் அதிகளவான சுற்றுபா பயணிகளும் , பிரதேச மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளமை பிரதேச மக்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.