இன்று (03) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம், யாழ். நூலகம் மற்றும் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இந்திய உயர்மட்ட குழு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு வருகை தந்தனர்.
இதன்போது இவர் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டுள்ளதோடு நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் செல்லவுள்ளார்.
அத் துடன் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளதுடன் யாழ். பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைக்கவுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ததுடன் கோணேஸ்வரப்பிருமானையும் தரிசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.