விலைக்கழிவுடன் அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அச்சக கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளுக்கு 30 வீத விலைக்கழிவு வழங்கப்படுவதாக தேசிய அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடிதத்துடன் வந்தால் கழிவு
குறித்த விலைக்கழிவில் அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள பாடசாலை அதிபரின் கடிதத்துடன் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனம் அல்லது அதனது விற்பனைக் கிளைகளுக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
அந்த வகையில், பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.