யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
”இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த கோரியே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டச் செயலகத்தை முற்றுகை
மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.