வடக்கு கிழக்கில் உள்ள வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
யாழில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.