சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆடவர் உலக கிண்ணம் 2023 போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விராட் கோலி, போட்டிகளின் 11 இன்னிங்ஸ்களில் ஒன்பதில் குறைந்தது அரை சதம் அடித்திருந்தார்.
சாதனை
இந்த போட்டியில் அவர் எடுத்த 765 ஓட்டங்கள், ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஒரு தனி துடுப்பாட்ட வீரரால் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்திருந்தன.
இது 2003 போட்டியில் 673 ஓட்டங்களை பெற்ற சச்சின் டெண்டுல்கரின் முந்தைய சாதனையை முறியடித்தது.
இறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 63 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி தனது போட்டியை மற்றொரு அரை சதத்துடன் முடித்தார். எனினும் அவரது முயற்சிகள், இந்தியாவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லவில்லை.