உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி இந்த தொடரை வெற்றிக்கொண்டது.
இந்தநிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷசின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
அவமரியாதை
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதனை பலரும் ‘அவமரியாதை’ என்று முத்திரை குத்தியுள்ளனர்.
அணியின் தலைவர் பெட் கம்மின்ஸால் பகிரப்பட்ட இந்தப் படம், விரைவாக பல்வேறு தளங்களில் பரவிய விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வென்ற சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படம் வெளிப்பட்டுள்ளது.