கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதியளித்துள்ளது.
ஏனைய குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.
மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் “வாய்ஸ் நோட்ஸ்” (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.