யாழ்ப்பாணம் கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அறுத்தது யார்? தகுந்த விசாரணை வேண்டும்
முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு – நினைவுக் கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அதேவே:ளை அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் மயூரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதியெங்கும் மாவீரர் நினைவேந்தல் அனுடிக்கப்பட்டுவரும் நிலையில் கொடிகள் அறுத்தெறியப்பட்ட சம்பவம் பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளது.