யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் காணியை விற்று , காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவற்குழி பகுதியில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவரின் காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை
அதோடு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். இதன்போது, தனது காணிக்கு சென்றபோதே , காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அறிந்துள்ளார்.
அதனை அடுத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு பெண்கையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.