ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே மழைக்காலங்களில் பேருந்துக்குள்தான் மழை பெய்வது பார்த்திருக்கின்றோம். ஆனால், சற்று வித்தியாசமாக விமானத்தில் உள்ளே மழை பெய்த சம்பவம் நடந்திருக்கிறது.
வைரலாகும் காணொளி
ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது இருபக்கமும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுக்கு நடுப்பகுதி முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.
Air India flight 🇮🇳🤦🏽♂️🤦🏽♂️pic.twitter.com/7dpgcSPI2g
— Farid Khan (@_FaridKhan) November 29, 2023
எனினும் , ஒன்றுமே நடக்காதது போல் அதை கண்டுகொள்ளாமல் பயணிகள் தூங்கிய நிலையில் உள்ளனர். விமானம் எங்கு சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொழில் நுட்பகோளாறாக கூட தண்ணீர் கசிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும், விமான நிறுவனம் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அதனை விடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் அதனை கலாய்த்து வருகின்றனர்.