24 வயதான மலையாள நடிகை லஷ்மிகா சஜேவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை லஷ்மிகா சஜேவன் மலையாளத்தில் வெளியான ‘காக்கா’ குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றவர்.
நடிப்பை தன்னுடைய பேஷனாக வைத்திருந்த இவர், ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில், மாரடைப்பு தான் லஷ்மிகா உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தற்போது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.