அம்பாறையில் மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் சிசிடிவி கெமராவின் HARD DISK மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணையை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணையில் திடீர் திருப்பம்
மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம நேற்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல்போன சிசிடிவி கெமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்