கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.46,680-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120-க்கு விற்கப்படுகிறமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,835-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,765-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
அதேசமயம் வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.
இன்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.78-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.