பருத்தித்துறை கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்த இரண்டு இந்திய படகுகளுடன் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
ஒரு படகில் 10 கடற்றொழிலாளர்களும் மற்றைய படகில் 13 கடற்றொழிலாளர்களும் வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய மொத்தமாக 23பேர் நேற்று(09.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று காலை 5.30க்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.