மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சுமூகமான சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் நாளை (11.12.2023) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விஞ்ஞானம், கணனி தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை நாளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுமூகமான சூழ்நிலை
அத்துடன் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதநேய பீடங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு மாணவர் நிலைய வாயிலில் கட்டிவைக்கப்பட்டதையடுத்து, மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.