மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி பெண் கைது
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 57 வயதுடைய ஆணும் கிளிநொச்சி மற்றும் ரத்தொட பிரதேசங்களை சேர்ந்த 30 , 57 வயதுடைய இரண்டு பெண்களுமாவர்.
கல்கிஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.