நாட்டில் வாகன விபத்துக்களால்ல் பலர் அநியாயமக உயிரிழந்து வரும் நிலையில் தமிழர் பகுதியில் இ.போ.ச பேருந்து ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் மூழ்கியபடி பேருந்து ஓட்டும் காணிளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நேற்று (11) பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதிகளின் கவனயீனத்தால் பறிபோகும் உயிர்கள்
இதன்போது நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு சாரதி பேரூந்தை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில், பயணிகளின் உயிரை பற்றி சிந்திக்காது ஓட்டுநரின் தொலைபேசியில் மூழ்கியபடி வாகனம் ஓட்டிச்சென்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.