இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தரங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் முப்பது வீதமான பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சைக் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில், அடுத்த வருடம் முதல் கல்வியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.