இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதேவேளை, பாலமுருகன் ஆலயத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
மேலும், கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைத் தங்கல் முகாம்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.