யாழ் – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (23.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சற்தேக நபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டிக்கு பின்புறமாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா மீட்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன.
இவரை இன்றைய தினம் (24.12.2023) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.