தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வத்தளை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (23) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் சந்தேக நபர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதித்த போது, அவரிடம் இருந்து 04 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது