தளபதி விஜய் நடிக்கும் 68 வது படத்திற்கு GOAT என பெயரிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ என பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.
இந்த படத்திற்கு ‘பாஸ்’ அல்லது ‘புதிர்’ என பெயர் வைக்கலாம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையில் தற்போது புதிய பெயர் ஒன்று வெளியாகியுள்ளது.
தலைப்பு சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளித்த அவர், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் தலைப்பு GOAT என லாக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் டைம் ட்ராவல் கான்செப்டை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இத்திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டுள்ளதுடன் 2024 கோடை கால வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.