நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் டிசம்பர் 23 ஆம் திகதி 40% அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதுவே இதுவரை நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் என்றும் சபையின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அதிகூடிய வருமானம்
கடந்த 22 ஆம் திகதி 140,791 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்ததாகவும் இதன் மூலம் சுமார் 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த 23ஆம் திகதி சுமார் 145,503 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் அதன் ஊடான வருமானம் சுமார் 50,174,550 ரூபாவாகும். இவ்வருமானமே இதுவரை நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இது ஒரு சாதாரண நாளின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 40% அதிகரிப்பு எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.